×

முந்திரி பக்கோடா

தேவையான பொருட்கள்

1 கப் கடலைமாவு
1 ஸ்பூன் அரிசி மாவு
50 கிராம் முந்திரி
3 டேபிள்ஸ்பூன் பட்டர்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/4 ஸ்பூன் இடித்த மிளகுத்தூள்
1 ஸ்பூன் சீரகம்
1/4 ஸ்பூன் ஓமம்
1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
தேவையான அளவு உப்பு
1 சிட்டிகை சோடா உப்பு
எண்ணெய் பொரிப்பதற்கு.

செய்முறை

கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சலித்துக் கொள்ளவும். அதன்பின் சீரகம், ஓமம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து விரல் நுனியில் நன்கு பிசைந்துகொள்ளவும். ப்ரட் க்ரம்ஸ் போல் வரும். பின் முந்திரி சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அதன்பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி பக்கோடா தயார்.

 

The post முந்திரி பக்கோடா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...